பசுமையான பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பிரகாரம், Citizens Development Business Finance PLC (CDB), e Shift Concept Center ஐ அறிமுகம் செய்துள்ளது.
CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சிநிரலின் பிரகாரம், நிறுவனத்தின் நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. CodeGen International (Pvt) Ltd உடன் CDB ஏற்படுத்திக் கொண்ட கைகோர்ப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இந்தத் தீர்வை வழங்க முன்வந்துள்ளது.
இந்த உடன்படிக்கையில் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நானயக்கார மற்றும் CodeGen இன் தவிசாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், சர்வதேச மற்றும் உள்நாட்டு பங்காளர்களுடன் CDB இணைந்து, இலங்கையில் EVs மற்றும் சூரிய வலுத் தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக ஹரித கைகோர்ப்பை ஆரம்பித்துள்ளது.
இந்த கைகோர்ப்பினூடாக ஏற்படுத்தப்பட்ட முக்கிய படிமுறையாக e Shift Concept Center நிலையம் அமைந்திருப்பதுடன், CodeGen International இன் துணைப் பிரிவான chargeNET உடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இதனூடாக, நிலையத்தில் காணப்படும் Charge செய்யும் பகுதிகளுக்கு வலுவூட்டப்படுகின்றன. இந்த கைகோர்ப்பினூடாக, EVs களுக்கு பரிபூரண சூழல்கட்டமைப்பு ஊக்குவிக்கும் வகையில் CDB இன் நிலைபேறாண்மையான போக்குவரத்து தீர்வுகள் துரிதப்படுத்தப்படுவதுடன், அறிவு பகிர்வு, EV சார்ஜ் செய்தல் மற்றும் EV மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது.
கொழும்பு 7, Greenpath பகுதியில் அமைந்துள்ள e Shift Concept Center இனால், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளில் ஆர்வமுள்ள நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் EVs மீது ஆர்வத்தை தூண்டுவது போன்றன மேற்கொள்ளப்படும்.