மதுவம் மற்றும் வெதுப்பக உற்பத்திகள் துறையில் உலகளாவிய முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றான ஏ பீ மயூரி லங்கா [AB Mauri Lanka] ‘’ஏ பீ மயூரி நட்சத்திர உயர் விருதுகள் 2023’’ [“AB Mauri Star Awards 2023 – “Rising Above ]என்ற சிறப்பு நிகழ்வில் முக்கிய பணியாளர்களின் சிறப்பை அங்கீகரித்துள்ளது.
இந்நிறுவனமானது அசோசியேட்டட் பிரிட்டிஷ் /புட்ஸ் பிஎல்சி உடன் இணைந்து 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 52 ஆலைகளில் முன்னிலையில் உள்ளது, ஏ பீ மயூரி அனைத்து இடங்களிலும் தொழிற்துறை மற்றும் கைவினைஞர் வெதுப்பகர்களை மேம்படுத்தும் முதற்தரமான பொருட்களை வழங்குவதில் வலுவான அர்ப்பணிப்பைப் பேணுகிறது.
இவ்வாறு சிறப்பாகச் செயற்பட்ட அர்ப்பணிப்புள்ள பணியாளர் குழுவினரைப் பாராட்டுவதற்காக இந்த ஆண்டு விருதுகள் இரவு நிகழ்வினை நடத்தியது.
ஏ பீ மயூரி நட்சத்திர விருதுகள் 2023, ஏ பீ மயூரியின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் சிறந்த பங்களிப்பைக் கொண்டாடியது. அண்மையில் பீஎம்ஐசிஎச் இல் [BMICH] நடைபெற்ற இந்த நிகழ்வானது, ஏ பீ மயூரி குழுமத்தின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பது மட்டுமன்றி, திறமைகளை வளர்ப்பதற்கும் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.
ஏ பீ நட்சத்திர விருதுகள் 2023 பல்வேறு பிரிவுகளில் விதிவிலக்கான திறன்களை அங்கீகரித்துள்ளதுடன் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சாதனைப் பகுதிகளை அங்கீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருதுகள் குழுவின் அர்ப்பணிப்பு, மற்றும் திறன்களை எடுத்துக்காட்டும் வகைகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.