இலங்கையின் நிர்மாணத் துறையில் நிலைபேறாண்மை தொடர்பான சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமையை கௌரவிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற CIOB Green விருதுகள் 2023 இல் Brandix க்கு “நிலைபேறாண்மைக்கான தலைமைத்துவம் விருது” என்பதன் கீழ் பிளாட்டினம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் 519,042 எனும் மாபெரும் பசுமையான கட்டட சதுர அடிப்பரப்பை Brandix கொண்டுள்ளது.
சூழலுக்கு நட்பான நிர்மாணத்துக்கு சிறந்த தொழிற்துறை நியமத்தை இந்த சாதனை பதிவு செய்திருந்தது. நிறுவனம் தன்வசம் ஐந்து சான்றளிக்கப்பட்ட கட்டடங்களை கொண்டுள்ளதுடன், அவற்றில் (5) பசுமையான கட்டடங்களையும், அவற்றில் இரண்டு (2) LEED பிளாட்டினம், இரண்டு (2) LEED Gold மற்றும் ஒரு (1) GreenMark பிளாட்டினம் போன்றன அடங்கியுள்ளன.
பூஜ்ஜிய காபன் நிலையை எய்திய உலகின் முதலாவது ஆடை உற்பத்தியாளராகவும் நிறுவனம் திகழ்கின்றது. அவற்றில் ஆறு தொழிற்சாலைகள் பூஜ்ஜிய காபன் வசதிகளைக் கொண்டுள்ளன.
இலங்கையில் கட்டட மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுக்கான முன்னணி நிபுணத்துவ அமைப்பாக The Ceylon Institute of Builders (CIOB) திகழ்கின்றது.
நிலைபேறான வழிமுறையை பின்பற்றுகின்றமைக்கான ஆற்றலை வெளிப்படுத்துகின்றமைக்காகவும், சூழல் பாதுகாப்பு, சமூக பொறுப்புணர்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வெளிப்படுத்துகின்றமைக்காகவும் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.