CBL சமபோஷ இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டில் உள்ள எதிர்கால சந்ததியினரை போஷாக்கு மிக்கவர்களாகவும், குணம் மிக்கவர்களாகவும் உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் வர்த்தக நாமமாகும். தேசத்தில் உள்ள சிறுவர்களுக்காக முன்னெடுத்துவரும் சமபோஷ ‘சிகரம்தொடும் சிறார்கள்’ திட்டத்தின் கீழ் சிறுவர்களின் கல்வித் திறமை, விளையாட்டுத் திறமை, போஷாக்கு, படைப்பாற்றல் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதற்கு தலைமைத்துவம் வழங்கி வருகிறது. இதில் எதிர்கால சந்ததியினர் உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஆரோக்கியம், விளையாட்டுத் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு சமபோஷவின் வலுப்படுத்தலுடன் நடத்தப்படும் ‘2023 சமபோஷ பாடசாலை விளையாட்டுப் போட்டி’ வடமத்தி, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஐந்து மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதில் வடமத்திய மாகாண சம்பியன்ஸ் பட்டத்தை அநுராதபுரம் மத்திய மகாவித்தியாலம் வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை தம்புத்தேகம மத்திய மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.