திருமகள் வடிவாய்த்
திகழும் பெண்ணின்
கருவை அறுக்கும்
கயவர் கூட்டம்
பருவுடல் விரும்பிப்
பலங்கொண்டே அவளின்
உருவைக் குலைக்கும்
உம்மர் கூட்டம்
பள்ளி போனாலும்
பணிக்குப் போனாலும்
பள்ளிகொள்ளவே பாங்காய்
அழைக்கும் கூட்டம்
அழகிய மலரின்
அங்கம் சிதைக்கும்
ஆண்மை அற்ற
ஆடவர் கூட்டம்
அகில சக்தியை
அற்பமாய் எண்ணி
ஆடை கொள்வர்
அசிங்கம் செய்வர்
பெண்ணை வெறும்
போகமாய் எண்ணிப்
போதை கொள்வர்
பொசுக்கி விடுவர்
துகில் உரித்திடும்
துச்சாதனர் பலருண்டு
அவர்கள் பாரதம்
சொல்லி மாளாது
சதி செய்திடும்
சகுனிகளும் உண்டு
சந்தைக்கு வருவதில்லை
அவர்களின் சரித்திரங்கள்
வெப்பக் கனலைக்
கக்கும் தீ
வேதனை தீர்க்குமோ?
மென்கை நீட்டுமோ?
மலர் காய்க்கும்
மானமற்ற தீ
வாடுகின்ற மலரதின்
மாதுன்பம் நீக்குமோ?
மலர் காய்க்கும் தீ
1K
previous post