1.1K
சிறு வயது ஏடு முதல்
நவீன உலகு
வரை
அர்ப்பணிப்போடு
கற்றுத் தர
ஆசிரியர்
இல்லை எனில்
ஆறடி மனிதனும்
ஐந்தறிவுடனே
அகிலத்தில்
உலாவுவான்…..
குற்றம் களைய
மனிதனாய்
உனையாக்க
அர்ப்பணிப்போடு
உரிமையாய்
தண்டிக்க
ஆசிரியர்
இல்லை எனில்
விரல்கள்
நடுவே பேனாவின்
பதில்
கம்பிகள் எண்ணியே
அகிலத்தில்
உலாவுவாய்
சபை நடுவே
உன் குரல்
ஓங்கி
உன் கைகள்
பலப்பட
அனைவரும் மதிக்கும்
ஓர் இடத்தில்
உன்னை ஏற்றி விட
அர்ப்பணிப்போடு
ஓளியேற்ற
ஆசிரியர்
இல்லை எனில்
சபை நடுவே
கைகளில்
விலங்குடனே
நீ நகர்வாய்
எதிர்கால தூண்களே
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்ந்திடு இன்றிலிருந்தாவது
ஆசிரியம் போற்றி