1.1K
பெறுமதிகள் பண்டங்களல்ல
பெறுமதிகள் நம் பிள்ளைகள்
பெறுமதியானவர்கள் இவர்கள்
பெறுமதியென்ற நம் வீட்டின்
பெறுமதிகளை விட உயர்ந்தவர்கள்
பெறுமதியென பாதுகாப்போம்
பெறுமதிகளென சேமிப்போம்
பெற்ற பேறென வளர்ப்போம்
பெறுமதியான உலகில் – நாளை
பெறுமதியான தலைவர்கள்
பெறுமதியானவர்கள் சிறுவர்கள்
பெரு மதி படைத்தவர்கள் இவர்கள்
பெறுமதிகளில்லை ஒப்பிட
பெரு மதிகளில்லை இணையாக
பெற்ற பேறென காப்போம் வாரீர்