பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக படகில் பயணித்த இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே கடந்த வியாழக்கிழமை (05) இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரும் இன்னும் சில நபர்களும் இணைந்து பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக படகில் பயணித்துக்கொண்டிருந்த போது, படகு புயலில் சிக்கிக் கடலில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது. கடலினுள் விழுந்த இந்த இளைஞரை படகிலிருந்த ஏனையவர்கள் மீட்ட போதும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக இளைஞர்கள் பலர், பிரான்ஸிலிருந்து பிரிட்டன் நோக்கிப் படகு மூலம் புலம்பெயர்ந்து வருகின்றமை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.