வீதியில் பயணிக்கும் போது அதிகளவில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பாக மக்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை உமிழ்வு சோதனை பிரிவு தெரிவித்தது. 070 3500 525 எனும் WhatsApp இலக்கத்தினூடாக இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடுகளை பொதுமக்கள் முன்வைக்க முடியும். அதிகளவில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களையும் அவை பயணிக்கும் இடத்தையும் தெளிவாக அறியக்கூடிய வகையிலான படத்தை WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியுமெனவும், வாகன புகை உமிழ்வு சோதனை பிரிவு தெரிவித்தது. பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் வாகன புகை உமிழ்வு சோதனை பிரிவு விசாரணையை முன்னெடுக்குமென்பதுடன், வாகனத்தை அடையாளம் கண்டு, குறைபாட்டை சீர்செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் வாகன புகை உமிழ்வு சோதனை பிரிவு தெரிவித்தது.
இதற்கமைய 070 3500 525 எனும் WhatsApp இலக்கத்துக்கு அல்லது 011 2 66 99 15 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை வழங்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.