பேலியகொடையிலுள்ள வெளிநாட்டுப் பொதிகள் பரிவர்த்தனை களஞ்சியசாலையிலிருந்து 122 மில்லியன் ரூபா பெறுமதியான 16 கிலோகிராம் குஷ் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் சுங்கத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டன. கனடாவிலிருந்து கொழும்பிலுள்ள முகவரியொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியிலிருந்தே இந்தப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார். மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் இந்தப் போதைப்பொருட்கள் கையளிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார். இதேவேளை, உடவளவை பொலிஸாரினால் பலஹருவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சாச் செடிகள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக 55 மற்றும் 32 வயதுடைய இருவரே, கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.