நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென, நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இவ்வாறு அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வளா கங்கை வெள்ள மட்டத்தை அடையுமெனவும், அத்திணைக்களம் தெரிவித்தது.
இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இப்பகுதிகளில் பாரிய வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும், அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. வௌ்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இது தொடர்பாக சாரதிகளை அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.