வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை நேற்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையினூடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.