பிரிட்டிஷ் கவுன்சில் IELTS தேர்வுக்கு தோற்றுவோர் தாம் எதிர்பார்த்த பெறுபேறுகளை எய்தாதபட்சத்தில், மீண்டும் முழுப் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய தேவையை இல்லாமல் செய்யும் புதிய உள்ளம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. One Skill Retake என்பதனூடாக பரீட்சார்த்திக்கு, IELTS பரீட்சையில் செவிமடுத்தல், வாசித்தல், எழுதுதல் அல்லது பேசுதல் (Listening, Reading, Writing, or Speaking) போன்றவற்றில் ஒரு பகுதிக்கு மாத்திரம் மீளத் தோற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாதாரண IELTS பரீட்சையின் போது தோற்றுபவரின் திறன்களை இனங்காணும் முறை மற்றும் நேரம் போன்றன மாறாமல் இருக்கும் என்பதுடன், இதர திறன்களை பூர்த்தி செய்வதில் பரீட்சார்த்திகள் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
பிரிட்டிஷ் கவுன்சிலில் IELTS பணிப்பாளர் அன்ட்ரூ மெக்கென்சி கருத்துத் தெரிவிக்கையில், “One Skill Retake என்பது IELTS வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான தயார்ப்படுத்தல் மற்றும் ஆதரவுடன் எமது பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சை தினத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.” என்றார்.
‘எவ்வாறாயினும், One Skill Retake இனால், பரீட்சார்த்திகளுக்கு, தமது முதலாவது முயற்சியில் திருப்திகரமான வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என கருதும் ஒரு ஆங்கிலத் திறனை மாத்திரம் மீள பரிசோதிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக நேர்த்தியான தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது என நாம் நம்புகின்றோம்.” என்றார்.
“IELTS One Skill Retake ஐ ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள், விண்ணப்பதாரியின் தரத்தை குறைக்காமல், பிரவேச தேவைப்பாடுகளில் நெகிழ்ச்சித் தன்மையை வழங்க முடியும். இந்தத் திட்டம் தொடர்பில் IELTS பங்காளர்கள் பெருமை கொள்வதுடன், பரீட்சார்த்திகளுக்கு தமது முழுமையான திறனை எய்துவதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.