இலங்கையின் முன்னணி உருக்கு கம்பி உற்பத்தியாளரான MELWA நிறுவனத்தின் அனுசரணையுடனும் தெரண ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படுகின்ற Skill Force தொழில்முறை வழிகாட்டுதல் வேலைத்திட்டத் தொடரின் புத்தம் புதிய திட்டம் அண்மையில் நுவரெலியா தொழில்பயிற்சி அதிகாரசபை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வில் நுவரெலியா மற்றும் அதை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேர் அளவில் கலந்துகொண்டனர். தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்ததை தொடர்ந்து என்ன தொழில் செய்யலாம் என்ற தீர்மானத்தை எடுக்கும் எதிர்பார்ப்பில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி Skill Force திட்டத்தின் மூலம் பெறுமதியான வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன.
தேசிய தொழில்பயிற்சி அதிகாரசபை நடாத்துகின்ற தொழில் பயிற்சி பாடநெறிகளுக்கு மேற்படி இளைஞர் யுவதிகளை ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு NVQ தகைமைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை Skill Force வேலைத்திட்டம் வழங்குகிறது.
உள்நாட்டு நிறுவனமான MELWA நிறுவனம் ஆற்றல் மிக்க இளம் தொழில்படையொன்றை இந் நாட்டு பொருளாதாரத்திற்கு சேர்க்கும் நோக்கத்துடன் இத் திட்டத்திற்கு பூரண அனுசரணை அளிக்கிறது. அதிக ஊதியத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வதற்கு மேற்படி தொழில் தகைமை முதன்மை காரணமாக உள்ளது.