இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, Prime Lands, 2020 ஆம் ஆண்டில் முதன் முறையாக கூட்டாண்மை பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்ததையடுத்து, இரண்டாவது தடவையாகவும், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.primelands.lkக்கு, 13ஆவது BestWeb.lk 2023 போட்டியில் தங்க விருதை சுவீகரித்துள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் திகதி Imperial Monarch இல் கோலாகலமாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருது Prime Lands க்கு வழங்கப்பட்டது. இதில் முன்னணி டிஜிட்டல் புத்தாக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் தூர நோக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொருளடக்கத்தின் புத்தாக்கத்திறன், கிராபிக் வடிவமைப்பின் தரம், கலையம்சம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் BestWeb.lk விருதுக்காக மீளாய்வு செய்யப்பட்டிருந்தது.
இந்த சாதனையினூடாக, Prime Land இன், டிஜிட்டல் மேம்படுத்தல் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இணையத்தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயற்பாடு மற்றும் உறுதியான இணைய பிரசன்னம் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தினூடாக வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் குழுமத்தின் வர்த்தக நாம நோக்கத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கௌரவிப்பு அமைந்திருப்பதுடன், இணையத்தளத்தினூடாக ஒப்பற்ற சொத்து விளக்கம், live chat ஊடாக உடனுக்குடன் உதவி மற்றும் மெய்நிகர் பயணங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், தொழிற்துறையில் நியமங்களை நிர்ணயிப்பதாகவும் அமைந்துள்ளது.