ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia Innovation விருதை பெற்றுள்ளது. புத்தாக்கங்களில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் புகழ்பெற்ற உலக அறிவாற்றல் நிறுவனமான Clarivate, இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற மதிப்பிற்குரிய Innovation Forumஆல் இந்த விருது வழங்கப்பட்டது.
South Asia Innovation Awardsக்கான தேர்வு செயல்முறை Clarivateஇன் சிறந்த 100 Global Innovators என்ற வழிமுறையுடன் நெருக்கமாக இணைகிறது, இது உலகளாவிய கண்டுபிடிப்புத் தலைவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோலாகும். Derwent World Patents Index (DWPI) மற்றும் Derwent Patents Citation Index ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில், காப்புரிமை அளவு மற்றும் ஒவ்வொரு காப்புரிமை பெற்ற யோசனையின் (Ideas) புத்தாக்கத் திறனின் வலிமையையும் Clarivate மதிப்பீடு செய்கிறது.
MAS Holdingsஇன் பிரதம கண்டுபிடிப்பு அதிகாரி ரணில் விதாரண கூறுகையில், “Clarivate நிறுவனத்திடமிருந்து தெற்காசிய கண்டுபிடிப்பு விருதை மீண்டும் பெறுவது எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்த தொடர்ச்சியான சாதனை, புத்தாக்கமான கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கும் உயர்தர அறிவுசார் சொத்துக்களின் (Intellectua; Property) கோப்புறையைப் பராமரிப்பதற்கும் MAS இன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. புத்தாக்கத்துக்கான எங்கள் அர்ப்பணிப்பு வேறுபாட்டை உந்துவது மட்டுமல்லாமல் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வெற்றிக்கும் பங்களிக்கிறது.” என தெரிவித்தார்.