நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான மக்கள் வங்கி, ஒக்டோபர் 1ஆம் திகதியன்று உலக சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை கொண்டாடியது. நமது எதிர்காலத்தின் தூண்களான சிறுவர்களையும், அவர்களின் ஞானம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக நமது சமுதாயத்தை வளப்படுத்திய முதியவர்களையும் வங்கி மனமாரப் பாராட்டியுள்ளது.
இசுரு உதான கணக்குகளை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது, இது 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளில் 2023 ஒக்டோபர் 1 முதல் 2023 டிசம்பர் 31 வரை வைப்புச் செய்யப்படும் போது அவை விசேட பரிசுகளுக்குத் தகுதி பெறும். 5 முதல் 18 வயது வரையிலான பாடசாலை மாணவர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் சிசு உதான கணக்குகள், வட்டியை வழங்குவது மட்டுமல்லாது, வைப்புத் தொகையின் அடிப்படையில் பல பரிசுகளையும் வழங்கும்.
சிரேஷ்ட பிரஜைகளுக்காக மக்கள் வங்கியானது, பாதுகாப்பான மற்றும் சௌகரியமான ஓய்வுகாலத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு நன்மைகளை வழங்கும் பரினத கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.