1.2K
உண்மை உரைப்பவளே
உல்லாசம் புரிபவளே //
உயிரில் கலந்தவளே
உயர்வாய் மதிப்பவளே //
உறவாய் வந்தவளே
உற்சாகம் தந்தவளே //
உறக்கம் கலைந்தவளே
உவகை கொண்டவளே //
உணவை ருசிப்பவளே
உணர்வால் உயர்ந்தவளே //
உள்ளத்தில் வாழ்பவளே
உலகத்தை ஈர்த்தவளே //
உடையை ரசித்தவளே
உடலை மறைத்தவளே //
உதட்டால் புன்னகிப்பவளே
உபத்திரவம் செய்யாதவளே //
உழைப்பில் சிறந்தவளே
உதவி செய்பவளே //
உறுதியாய் நிற்பவளே
உரிமையை வென்றவளே //
ஊழலை வெறுப்பவளே
ஊதியம் பெறுபவளே //
ஊருக்கு உபதேசிப்பவளே
ஊக்கத்திற்கு உதாரணமானவளே