1.3K
வியர்வை
காய முன்பே
வேதனம்
ஆண்டான்
அடிமை பேதமை
ஒழித்தே
உழைத்திடும்
வருமானம்
ஓரிடத்தில்
குவியாமல்
பொருளீட்டும்
முறைபற்றி
போதனைகள்
செய்திட்டார் பூமான்
நபியவர்கள்
கம்யூனிஸ
சோஷலிசக்
கொள்கைகளுக்கு
முன்மாதிரியாய்
கோமான் நபியவர்களின்
கொள்கைகளும்
கோட்பாடுகளும்
அமைதியிழந்து
தவிக்கும்
ஆன்மாக்களுக்கு
அண்ணல் எம்
பெருமானாரின்
சொல்லோடு
செயலும்
வாழ்வியலாகிட
சாந்தியோடு
சமாதானம்
தழைத்தோங்கிடும்