நம்மால் ஒரு சோகம்
யாரையும் தாக்கிட
அனுமதித்திடா வாழ்வு
எத்தனை நலமானது
நம்மால் யாரும்
உடைந்தழவில்லையெனும்
உத்தரவாதம்
எத்தனை உயர்வானது
நம்மால் யாரேனும்
மகிழ்ச்சியை உணர்கிறார்களெனும் திருப்தி
எத்தனை ஆத்மார்த்தமானது
நம்மால் யாரும்
வெறுத்து ஒதுக்கப்படவில்லையெனும் உணர்வு
மனதுக்கு எத்தனை ஒத்தடமானது
ஏதேனும்
ஆறுதல் தேவைப்படுகையில்
நாம் தான் முதன் முதலில்
நினைவுக்கு வருகிறோமெனும் பூரிப்பு
எத்தனை பெறுமதி மிக்கது
மொத்தத்தில்
நம்மால் ஒரு சந்தோஷம்
திருப்தி
ஆறுதல்
அரவணைப்பு
அக்கறை
அங்கீகாரம்
கண்ணியம்
நேசத்தை
அடுத்தோருக்கு
கொடுக்க முடிவதெல்லாம்
பெரும் வரம்
அதனால் தான்
எல்லோராலுமது
முடிவதில்லை!
வரம்
1.2K
previous post