Home » முல்லைத்தீவு மாவட்ட நீதவானை சட்ட மாஅதிபர் அழைத்தது ஏன்….?

முல்லைத்தீவு மாவட்ட நீதவானை சட்ட மாஅதிபர் அழைத்தது ஏன்….?

நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம்

by Damith Pushpika
October 1, 2023 6:13 am 0 comment

முல்லைத்தீவு நீதவான், சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமையானது, அவரது வழக்கு விசாரணையொன்றுக்கு அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள சட்டத்தரணியுடன் கலந்தாலோசிப்பதற்காகவே தவிர, நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்குமாறோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ அல்லவென்று நீதிச்சேவைகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடந்ததென்ற நிதர்சனம் புரியாமல், வெவ்வேறு நபர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பாக முடிவெடுக்க முயற்சிப்பதையும் கருத்து தெரிவிப்பதையும் அவதானிப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றறிந்த நீதவான், சட்ட மாஅதிபர் தன்னை அவரது திணைக்களத்துக்கு வரவழைத்து தனது உத்தரவை மாற்றச் சொன்னாரென்ற நீதவானின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 07 எழுத்தாணை விண்ணப்பங்களில் மூன்றில் நீதிபதி, தனது அதிகாரபூர்வ / தனிப்பட்ட கோதாவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகள் 11.10.2023 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில்14.09.2023 அன்று சட்ட மாஅதிபரின் உதவி கோரியும் அவருக்காக ஆஜராகுவதற்கு அரச சட்டவாதி ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் எழுத்துமூலம் முல்லைத்தீவு நீதவான் கோரியிருந்தார்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தனது 15.09.2023 எனத் திகதியிட்ட கடிதத்தின் மூலம் நீதவான் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்ட மாஅதிபரை கோரியிருந்தது.

இந்தப் பின்னணியில் அதிகாரிகளின் தேவையான ஒப்புதலுடன் 21.09.2023 அன்று நீதவானுடன் அவருக்கு எதிரான வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த சட்ட மாஅதிபர் முடிவு செய்தார்.

நீதவான், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஒரு சேவை நாடுனராகவே, சட்ட மாஅதிபர் திணைக்கள அலுவலர்கள் அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

எனவே, இது உண்மையில் சட்டத்தரணி – சேவை நாடுனருக்கிடையேயான உறவின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு சந்திப்பாகும்.

திணைக்களத்துடனான கூட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுவிட்டு, அவருக்கே நன்கு தெரிந்த காரணங்களுக்காக, அவர் இந்த அபத்தமான/ பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் உண்மையான நோக்கத்துக்கு அவர் ஒரு திருப்பத்தை கொடுப்பது மிகவும் நெறிமுறையற்றதும் தொழில்முறையற்றதுமாகுமென்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division