Home » சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது

சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது

சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சாலிய

by Damith Pushpika
October 1, 2023 6:15 am 0 comment

தற்போது பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் விடயத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாக தனது அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்து நாட்டை விட்டும் வெளியேறுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரை தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லையென்பதுடன், நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division