2023 ஆம் ஆண்டு உலக ஓசோன் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆனவிலுந்தவ சதுப்புநிலத்தின் இயற்கை மீளுருவாக்கத்தை துரிதப்படுத்தும் செயல்பாட்டுடன் தொடர்புடைய அறிவியல் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு, NDB வங்கியின் ஊழியர்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் முன்வந்து வழங்கினர்.
இந்த நிகழ்வானது வங்கியின் ‘பணியாளர் தன்னார்வத் தொண்டு’ திட்டத்தின் ஒரு பகுதி ஆகிய அதே வேளை இந்தத் திட்டம், வங்கியின் பெருநிறுவன நிலைத்தன்மை மற்றும் மனித வளத்துறைகளால் ஒன்றினைந்து செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் தன்னார்வலர்கள் வயம்ப (Wayamba) பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் நிதிப் பிரிவில் தேர்ச்சி பெற்று NDB வங்கியின் பட்டதாரி பயிற்சி திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஊழியர்களின் பங்கேற்பை அதிகரிப்பது, ஒருங்கிணைந்த குழுவை உருவாக்குவது, பரந்த பார்வைக்கான புதுமையான அனுபவங்களை வழங்குவது, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு பங்களிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும்.