இத்தொழில் சார் கூட்டானது அனைத்து ஆயிரக்கணக்கான சர்வதேச ரீதியிலான சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரபலமான திரைப்பட Trailer களை வழங்குவதன் மூலம், முன்னெப்போதையும் விடவும், நுகர்வோரை மகிழ்விக்கும் முகமாக அதிநவீன 8K தரத்திலான திரைப்படங்களினை அவர்கள் கையருக்கே கொண்டுவருகின்றது.
தொடர்ச்சியாகப் 17 ஆண்டுகளாக உலகிலேயே முன்னணித் தொலைக்காட்சி தயாரிப்பாளரான Samsung Electronics, ஆனது Warner Bros. Pictures உடன் ஒரு அர்த்தபூர்வமான கூட்டுவணிகச் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது.
இக்கூட்டுவணிகச் செயற்பாட்டினைத் தனது நியோ QLED 8K திரைகளில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்பட Trailer களைக் காண்பிக்கின்றது. இதன் மூலம் சர்வதேச ரீதியில் 65,000 க்கும் மேற்பட்ட Retail Store களில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.
“இத்தொழில் சார் கூட்டானது 8K யினை உள்ளீர்க்கும் ஒரு அற்புதமான முயற்சியாகும். இது NEO QLED 8K இன் சிறப்பியல்புகளினை வெளிக்கொணருகின்றது. அது மட்டும் அல்லாது சினிமா தரத்தினில் திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதற்கு அதன் பாவனையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றது” என்று Samsung Electronics Visual Display Business இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர் Cheolgi Kim அவர்கள் கூறினார்.
Samsun ஆனது Warner Bros. உடன் தனது கரங்களினை கோர்த்துக் கொண்ட நிகழ்வானது Ultra – Premium TV தொழில்நுட்பம் ஊடாக அதன் பாவனையாளர்கள் தமக்குப் பிடித்த திரைப்படங்களை முழு மனநிறைவுடன் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினையும் Samsung ஆனது பெற்றுத் தந்திருக்கின்றது. 8K Content இற்கான கேள்வியினைப் பரீட்சித்துப் பார்த்து அதன் தேவைதனை நன்கு புரிந்து கொள்ளும் முகமாக, Samsung மற்றும் Warner Bros. என்பன இந்த ஆண்டின் தொடக்கக் காலப் பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 450க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை ஸ்தாபனங்களில் ‘Creed III’ Trailer ரைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக தமது கூட்டுவணிகச் செயற்பாட்டினைப்பரீட்சித்துப் பார்த்தனர்.