மென்மையான, பயன்படுத்திவிட்டு அழித்துவிடக்கூடிய டிஷு கடதாசி தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையில் பெருமைக்குரிய நாமமும், சந்தை முன்னோடியான புகழ்பெற்ற Flora டிஷு தயாரிப்புகளின் உற்பத்தியாளராகவும் திகழும் Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட், தனது 40 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் விசேட நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்வது தொடர்பான தனது தூரநோக்குடைய திட்டங்களை அறிமுகம் செய்திருந்ததுடன், துரிதமாக அதிகரித்து செல்லும் சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலையிலும் ஊழியர்களையும், விநியோகத்தர்களையும் அழைத்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தது.
2023 செப்டெம்பர் 9 ஆம் திகதி தனது 40 வருட பூர்த்தியைக் குறிக்கும் நிகழ்வை, கோல்டன் ரோஸ் பகுதியில் முன்னெடுத்திருந்தது. இதன் போது, நிறுவனத்தில் பணியாற்றும் விநியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவித்திருந்தது.
1983 ஆம் ஆண்டு முதல் பலர் Flora டிஷுக்களுடன் இணைந்து தமது தொழில் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒன்று முதல் மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டிருந்த இவர்களுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து கௌரவிப்பு சின்னம் வழங்கப்பட்டிருந்தது.