மாணிக்கம்
படிப்பில் விண்ணர்
பரீட்சையிலோ
ரொப்பர்
நம்பினர்
அனைவரும்
இவனை
பெயரைக்
காப்பான்
பள்ளியின்..
எடுப்பான்
ராங் முன்னுக்கு
குடும்பம் வரும்
உயர்வுக்கு
வந்தான்
கந்தப்பு
கனடாவில
இருந்து ..
மண்டை
கழுவினான்
மாணிக்கத்தின் ..
அவன் பந்தாவிற்கு
பலியாடாகினான்
மாணிக்கம்
உன்னை எடுப்பது
எல்லாம் என்
செலவு எண்டான் ..
வீசா
அனுப்புறன்
வா எண்டான்
மாணிக்கம் பிடித்தான்
வால்
இவனுக்கு
பறந்தான் அவன்
தன் காரியம் முடிய..
பாவம் இவன்
நம்பினான் ஆழமாய்
படிப்பை மறந்தான்
பரீட்சை தூசாகி
பறந்தான் கனடா எனும்
கற்பனை வானிலே
எடுத்தான் செல்
ஒற்றை காதிலே..
மாட்டினான்
கடுக்கன் மறு
காதிலே..
பறந்தான் பள்சரில்
நாலு சந்திக்கு
பரீட்சை பெறுபேறும்
கந்தப்பு அண்ணையின்
அழைப்பு மணியும்
ஒரே நேரத்தில்
தம்பி கனடாவில
அரசாங்கம் மாறிட்டு
ஒண்டும் செய்யேலா
உங்கை ஏதும்
வேலை பாருங்கோ
தலை சுற்றி சாய்தான்
தான் மோசம்
போனதை எண்ணி
பெறுபேறும் போய்
வீசாவும் போய்
நட்டாற்றிலே