மாத்தறை, பம்புரனை பிரதேசத்தில் கடையொன்றில் பெண்ணொருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடையில் ஒரு இறாத்தல் பாணை நேற்று முன்தினம் மாலை இந்தப் பெண் கொள்வனவு செய்து, பாடசாலைக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக அப்பாணை வெட்டிய போது அதில் பீடித்துண்டு இருந்தமையை இப்பெண் அவதானித்துள்ளார். முதலில் கறிவேப்பிலையென எண்ணி அதை நசுக்கிய போது, அது பீடியெனத் தெரியவந்ததுடன், பின்னர் அதை நன்றாக வெளியே எடுத்து பார்த்த போது பீடியின் பெரிய துண்டொன்றாக இருந்தது. இந்த விடயம் தொடர்பாக கடும் அதிருப்தியடைந்த இப்பெண், இனிமேல் பாண் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு தொலைபேசியினூடாக இப்பெண் அறிவித்ததை தொடர்ந்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
1.5K
previous post