தலவாக்கலை, வட்டக்கொடை ஒக்ஸ்போட் தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலய த்தில் நேற்று அதிகாலை தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தின் கதவை உடைத்துக்கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி மற்றும் ஐயப்பன் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.ஒக்ஸ்போட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (22) மாலை முதல் நேற்று (23) காலைவரை மின் தடை ஏற்பட்டிருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையில் திருட்டு சம்பவம்;
அம்மன் ஆலயத்தில் தாலி, சங்கிலி திருட்டு
மின்துண்டிப்பு நேரத்தில் திருடர் கைவரிசை
1.6K
previous post