இலங்கையில் ஆட்சி செய்த எந்தவொரு தமிழ் குறுநில மன்னரும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனித்துவம் வாய்ந்த முறையில் ஈழம் என்ற பெயரில் அரசாட்சி செய்த வரலாறுகள் இல்லை என்பதோடு வட மாகாண நிலப்பரப்பு வேறாகவும் கிழக்கு மாகாண நிலப்பரப்பு வேறாகவும் தனித் தனியாக ஆட்சி நிர்வாகம் புரிந்தமையினால் சிற்றரசர்களாக திகழ்ந்தார்கள். அதே வேளை இராவணன் இலங்கை வேந்தனாக இருந்து இலங்காபுரியை ஈழம் என்ற பெயரில் அரசாட்சி செய்தார் என்பது வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன,
ஈழம் என்னும் சொற்பதத்தால் இலங்கையின் எல்லா இடங்களிலும் செறிந்து வாழ்ந்த அனைத்து தமிழ் மக்களும் ஈழத் தமிழர்கள் என்று போற்றப்பட்டு அழைக்கப்பட்டார்கள்.
ஆதி காலத்தில் இவ்வாறு அழைக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் உண்டு. நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் பேச்சு மொழியும் நாகரீக தன்மையும் மற்றும் மரபுப் பண்பாட்டு நடைமுறையில் வெவ்வேறு பரிமாணத்தை கொண்டவையாக இருந்தன என்பதாகும்,
இலங்கை தமிழ் மக்களை ஈழத் தமிழர்கள் என செல்லமாக அழைத்தமை மாத்திரமன்றி இராவணனின் அரசாட்சி நிர்வாகத்தை புகழ்ந்து இலாகாபுரி அது ஒரு சொர்க்கா புரி எனவும் வர்ணித்தார்கள்.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் தமிழரசுக்கட்சியின் தோற்றம், தமிழ் மக்களின் அடிப்படை சிறப்பு உரிமைகளை இழப்பதற்கும், அவர்களின் மேன்மையான பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய மரபுகள், வரலாறுகள் அழிந்து செல்வதற்கும் காரணமாக அமைந்தன. இதை தமிழ் தலைமைகள் உணர்ந்து கொள்ளுமா?
தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் காலம் காலமாக இருந்து வந்த ஜக்கியம் புரிந்துணர்வு, நல்லிணக்கம், என்பவற்றை சீரழிக்கும் வகையில் முதன் முதலாக அரசியல் ஞானம் அற்ற முறையில் சத்தியாக்கிரகம் போன்ற பகைமை எதிர்ப்பு, இன முரண்பாட்டு கலாசாரத்தை தொடங்கி வைத்தார்கள்.
இலங்கை தமிழ்த் தலைவர்களுக்கு வயது முதிர்ச்சியடைந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி பெறவில்லை என்பதற்கு இது ஒரு ஆதாரம் எனலாம். தமிழர் வரலாற்றில் இல்லாத விடயத்தை அரசியலாக்கியது,
இரு மாகாணங்களை இணைத்ததாக தனி நிர்வாக அலகுக் கோரிக்கை தீர்மானத்தை வட்டுக்கோட்டையில் முன் மொழிவாக நிறைவேற்றும் போது இது சாத்திமானதா? சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்குமா இக் கோரிக்கை மூலமாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு கிடைக்கும்? இதன் தாக்கம் எவ்வாறான சூழ்நிலையை தோற்றுவிக்கும் தமிழர்களின் பொருளாதாரம் எந்த சூழ்நிலைக்கு செல்லும்? மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை என்னவாகும்? இவற்றின் பின் விளைவுகள் பக்க விளைவுகள் எவ்வாறு அமையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இருக்கும் தமிழ் மக்களின் நிலைமைகள் சிறப்பு உரிமைகள் எவ்வாறு அமையும் என்று கூட சிந்திக்க தெரியாத தலைவர்களாக இருந்துள்ளார்கள் என்பதுதான் கவலையான விடயம் எனலாம்,
தனி ஈழராஜ்ய அலகு நிர்வாகத்தை முன்னிலைப்படுத்தும் வேலை, எமது நாட்டுக்கு மிகவும் அருகாமையில் உள்ள அயல் தேசமான இந்திய நாட்டை பற்றிச் சிந்திக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மட்டும் இணைத்ததாக தனி அலகு நிர்வாகம் அரசாட்சி அங்கீகாரம் பெறுமா என எண்ணிப் பார்க்காத தலைவர்களே எமக்கு வாய்த்துள்ளனர்.
இலங்கை ஒருமைப்பாடு கொண்டதாக, அரசியல் வழிமுறைக்கு உட்பட்டதாக பாராளுமன்ற சட்ட உயர் சபையில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து தேவைகளை முன் மொழிந்து, இணக்க செயல்முறை மூலமாக உரிமைகளை பெற்றெடுப்பதற்கான முயற்சிகளை தூரநோக்கு சிந்தனை உடைய தீர்க்க தரிசனத்துடன் மேற் கொண்டிருக்க வேண்டும்.
சிவகுரு உமாகேசன், மட்டக்களப்பு