Home » சந்திரயான் 3 வெற்றியும் – இலங்கை, உலகப் பொருளாதாரத் தாக்கமும்

சந்திரயான் 3 வெற்றியும் – இலங்கை, உலகப் பொருளாதாரத் தாக்கமும்

by Damith Pushpika
September 24, 2023 7:03 am 0 comment

* உலக மற்றும் இலங்கைப் பொருளாதாரங்களுக்குச் சாதகமான தாக்கங்கள்

* இந்திய மற்றும் இலங்கை பொருளாதாரங்களுக்கு ஊக்கம்

* இலங்கை வணிகங்களுக்கு பெரும் ஊக்கம்

* இலங்கை வணிகங்களுக்கான செய்திகள்

* இலங்கை செய்யக்கூடிய கொள்கை மாற்றங்கள்

இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தின் கீழ் சந்திரயான் -3 மிக சமீபத்திய இந்திய சந்திர ஆய்வுப் பணியாகும். இதில் ‘விக்ரம்’ எனப்படும் லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ எனப்படும் ரோவர் ஆகியவை சந்திரயான்-2 க்கு இணையானவை. அதன் உந்துவிசை தொகுதி ஒரு சுற்றுப்பாதை போல் செயற்படுகின்றது.

சந்திரயான்- 3 ஜூலை 14, 2023இல் ஏவப்பட்டது. சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்தினை ‘சிவசக்தி’ எனவும் தரையிறங்கிய ஆகஸ்ட் 23, 2023 தினத்தை ‘இந்திய தேசிய விண்வெளி தினம்’ எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் இந்தியப் பணி இதுவாகும். மேலும் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்குப் பின்பு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியாவாகும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை ‘விக்ரம் சாராபா’வின் நினைவாக விக்ரம் என்கின்ற லேண்டருக்கு பெயரிடப்பட்டது. ஸ்பெக்ட்ரோ மீட்டர், கேமரா, மேக்னட்டோ மீட்டர் உள்ளிட்ட சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்ய பல்வேறு அறிவியல் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ரோவர், பிரக்யான், “விஸ்டம்/wisdom” என்பதற்கான சமஸ்கிருத வார்த்தையின் பெயரால் பெயரிடப்பட்டது. இது சந்திர மேற்பரப்பில் 500 மீட்டர் வரை பயணித்து மண்ணின் கலவை மற்றும் புவியியல் பற்றிய தரவுகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்- 3 திட்டம் இந்திய விண்வெளி திட்டத்துக்கான ஒரு முக்கிய மைல்கல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகும். இது சர்வதேச சமூகத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏனெனில் இது நிலவின் தென் துருவத்துக்கான எதிர்கால பயணங்களுக்கு வழி வகுக்கிறது. நீர் மற்றும் பனி நிறைந்ததாக நம்பப்படுகின்றது.

இந்தப் பணி, இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லேண்டர் மற்றும் ரோவர் வெற்றிகரமாக செயற்பட முடிந்தால் அது நீடிக்கப்படலாம். சந்திரனின் வரலாறு, புவியியல் மற்றும் வளங்களுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய மனிதப் புரிதலை மேம்படுத்த இந்த பணியால் சேகரிக்கப்பட்ட தரவு பயன்படுத்தப்படும்.

சந்திரனின் மேற்பரப்பில் நிரந்தர மனித இருப்பை நிறுவுவது உட்பட, சந்திரனுக்கான எதிர்கால பயணங்களைத் திட்டமிடவும் இது உதவும்.

உலக மற்றும் இலங்கைப் பொருளாதாரங்களுக்குச் சாதகமான தாக்கங்கள்

சந்திரயான்- 3 வெற்றிகரமாக முடிவடைந்தால், உலக மற்றும் இலங்கைப் பொருளாதாரங்களுக்குப் பல சாதகமான தாக்கங்கள் ஏற்படும். உதாரணமாக:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரித்தல்: உலக மக்களின் கற்பனையைப் படம்பிடித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழிலைத் தொடர அவர்களை ஊக்குவிக்கும். மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்கவும் புதுமைகளை அதிகரிக்கவும் இது உதவும்.

சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல்: இந்தப் பணிக்குப் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு தேவைப்படும். இது நாடுகளுக்கிடையே நம்பிக்கை மற்றும் புரிதலை வளர்க்கவும் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் உதவும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்: சந்திரனையும் அதன் வளங்களையும் நன்கு புரிந்துகொள்ள இந்தப் பணி உதவும். பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த அறிவு பயன்படுத்தப்படலாம்.

சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிறைவடைந்தமை உலக மக்கள் அனைவருக்கும் பெரும் வெற்றியாக அமைவதோடு, இலங்கைப் பொருளாதாரங்களுக்குப் பல வழிகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய மற்றும் இலங்கை பொருளாதாரங்களுக்கு ஊக்கம்

சந்திரயான்- 3 திட்டமிட்டபடி பூரணமாக வெற்றிகரமாக முடிவடைந்தால் இந்திய மற்றும் இலங்கை பொருளாதாரங்களுக்குப் பல வழிகளில் பெரும் ஊக்கமாக இருக்கும்.

பொருளாதார ஊக்கம்: இந்தப் பணிக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அத்துடன் உற்பத்தி மற்றும் வெளியீட்டு செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் பொருளாதார நடவடிக்கைகளையும் அதிகரிக்கும்.

தொழில்நுட்ப முன்னேற்றம்: விண்வெளி ஆய்வில் இந்தியா மற்றும் இலங்கையின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த இந்தப் பணி உதவும். இது அவர்களை உலகளாவிய விண்வெளித் துறையில் அதிக போட்டித்தன்மையடையச் செய்யும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும்.

அறிவியல் சார்ந்த அறிவு: சந்திரன், அதன் வளங்கள் மற்றும் எதிர்கால மனித ஆய்வுக்கான அதன் திறனைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த இந்தப் பணி உதவும். இது இரு பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

சர்வதேச ஒத்துழைப்பு: இந்தப் பணியானது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற விண்வெளி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை உள்ளடக்கியது. இது சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதனால் இலங்கையியினால் இது சார்ந்த மற்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

சுற்றுலா: சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவது இந்தியாவிலும் இலங்கையிலும் சுற்றுலாவை மேம்படுத்தும். இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் சந்திரனை வெற்றிகரமாக ஆராய்ந்த நாடுகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

எனவே, சந்திரயான்- 3 வெற்றிகரமாக முடிவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய சாதனையாக இருக்கும். அத்துடன் தொலைநோக்குப் பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கை வணிகங்களுக்கு பெரும் ஊக்கம்

சந்திரயான்- 3 இதுவரையில் வெற்றிகரமாக முடிவடைந்தமை இனிவரும் காலங்களில் இலங்கை வர்த்தகங்களுக்கு பல வழிகளில் பெரும் ஊக்கமாக அமையப் போகின்றது.

அதிகரித்த முதலீடு: இந்தப் பணிக்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். பாகங்கள் அல்லது சேவைகளை வழங்குதல் போன்ற பணிக்கான விநியோகச் சங்கிலியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இலங்கை வணிகங்களுக்கு இது உருவாக்கும்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் திறன்கள்: விண்வெளி ஆய்வில் இலங்கையின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த இந்தப் பணி உதவும். இது உலகளாவிய விண்வெளித் துறையில் இலங்கை வணிகங்களை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும்.

சுற்றுலா, கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற பல பகுதிகளில்: எடுத்துக்காட்டாக, விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இலங்கை வணிகங்கள் புதிய சுற்றுலா மார்க்கங்களை உருவாக்கலாம்.

மேம்படுத்தப்பட்ட நற்பெயர்: சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுவது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு மூலோபாய இடமாக (Strategic Location) இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தும். இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும்.

எனவே சந்திரயான்-3 வெற்றிகரமாக முடிவடைந்தால், இலங்கை வணிகங்கள் வளர்ச்சியடைவதற்கும் செழிப்பதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும்.

இலங்கை வணிகங்களுக்கான செய்திகள்

இலங்கை வணிகங்களுக்கான சில குறிப்பிட்ட செய்திகள் இங்கே:

விநியோகச் சங்கிலியில் ஈடுபடுதல்:

வருங்கால சந்திரயான் பணிக்கான கூறுகள் மற்றும் சேவை வழங்களில் உரிய வணிக நிறுவனங்கள் ஈடுபடுவதற்கான நேரம் இது. இலங்கையின் வர்த்தகத் திறன்களை உலகுக்கு வெளிப்படுத்தவும், புதிய வர்த்தகத்தை ஈர்க்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல்: சந்திரயான்- 3 வெற்றிகரமாக முடிவடைவது விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இலங்கை வணிகங்கள் இந்தப் பகுதியில் ஆர்வமாக இருந்தால், இப்போது திட்டமிடத் தொடங்குவதற்கான சிறந்த நேரமாக இனிவரும் காலம் அமையும்.

(20 ஆம் பக்கம் பார்க்க)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division