அமானா வங்கி தனது புதிய ATM இயந்திரத்தை, இல. 149, எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தை, நுகேகொட எனும் முகவரியில் அமைந்துள்ள Cool Planet Department Store வளாகத்தில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. பல அடுக்கு Department Store இல் முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்கள் மற்றும் பல்அம்ச உணவு விற்பனை பகுதி போன்றன அடங்கியுள்ளன.
புதிய ATM ஐ வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் திறந்து வைத்ததுடன், அந்நிகழ்வில், வணிக வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால், கூட்டாண்மை வங்கியியல் உதவி உப தலைவர் ரஜேந்திர ஜயசிங்க, வாடிக்கையாளர் உறவு பேண் முகாமையாளர் மஞ்சுள பீரிஸ் மற்றும் Cool Planet விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி இம்ரான் இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “நுகேகொட Cool Planet இல் ATM ஒன்றை நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக சொப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக பண மீளப் பெறுகைகளை மேற்கொள்வது மற்றும் கணக்கு மீதிகளை அறிந்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். எம்மையும் இணைத்து கொண்டமைக்கு Cool Planet நிர்வாகத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.