எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஒரு பொதுவான கவலை இருக்கிறது.பெற்றோர் தங்கள் குழந்தைகள் நன்கு படித்தவர்களாகவும், பொறுப்பு உள்ளவர்களாகவும், தங்கள் நிதிச் சுதந்திரத்தை நம்பிக்கையுடன் வழிநடத்தும் திறன் கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது சரியாக நடக்குமா என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பொறுப்பை ஒப்புக் கொள்ளும் வகையில், NDB, ஒரு உறுதியான மற்றும் சமூகம் சார்ந்த நிதி நிறுவனமாக, ஷில்ப குழந்தைகள் சேமிப்புக் கணக்குடன், இளைய சமுதாயத்தை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அத்துடன் அவர்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்குகிறது.
இந்த நோக்கத்திற்காக, ஷில்ப குழந்தைகள் சேமிப்புக் கணக்கு அதன் சமீபத்திய திட்டத்தின் மூலம் பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவ சிறந்த தீர்வை வழங்குகிறது. “உங்கள் வட்டியை இரட்டிப்பாக்குங்கள், உங்கள் எதிர்காலத்தை இரட்டிப்பாக்குங்கள்” என்ற விளம்பர முழக்கத்தின் கீழ், NDB ஷில்ப, சிறுவயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள சிறுவர்களையும் பெற்றோரையும் ஊக்குவிக்கிறது. இந்த நோக்கத்தை உயிர்ப்பிக்கும் வகையில் இரட்டை அடுக்கு பேருந்து ஒரு குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.
ஷில்ப குழந்தைகள் சேமிப்புக் கணக்கின் தனித்துவமான அம்சமானது கணக்கு வைத்திருப்பவருக்கு மாதாந்தம் குறைந்தது ரூ. 500 அல்லது அதற்கு மேல் வைப்பிலிடும் போது இரட்டை வட்டி வழங்கப்படும் (100% போனஸ் வட்டி). கணக்கு வைத்திருப்பவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள், வவுச்சர்கள் மற்றும் வேறு பரிசில்களும் வழங்கப்படும்.