கொமர்ஷல் வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை 2023ம் ஆண்டின் MerComm ARC விருது வழங்கலில் ஐந்து விருதுகளை வென்றுள்ளது. இது உலகின் மிகப் பெரிய வருடாந்த அறிக்கைகளின் போட்டியாகும். “வருடாந்த அறிக்கைகளின் அக்கடமி விருதுகள்” என்றும் இதை அழைப்பதுண்டு.
ஒருங்கிணைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் CSR பிரிவில் மரபு வழிமுறை வகைப்படுத்தலின் கீழ் வங்கி வெள்ளி விருதை வென்றுள்ளது. அட்டை வடிவமைப்பிலும் வெள்ளி விருது கிடைத்துள்ளது.
இது தவிர உள்ளக வடிவமைப்பு மற்றும் விளக்கப்படங்கள் என்பனவற்றுக்கும் வெண்கலப் பதக்கங்கள் அதேபோல் எழுதப்பட்ட விளக்கங்களுக்கான கௌரவ விருது என்பனவற்றையும் வங்கி வென்றுள்ளது. ARC விருதுகளுக்கான போட்டிகள் மிகவும் தனித்தன்மையானவை. ஓவ்வொரு அறிக்கையும் அதற்கு எதிராகவே மதிப்பிடப்படுகின்றன.
தனது நிறுவனத்தின் கதையை எடுத்துச் சொல்லும் வெற்றியின் அடிப்படையில் அவை மதிப்பிடப்படுகின்றன. கூட்டாண்மையின் இலாபத்தன்மை அல்லது உற்பத்திகளின் அடிப்படையில் இவை மதிப்பிடப்படுவதில்லை.
ஆனால் ஆக்கபூர்வதன்மை, தெளிவு, தாக்கநிலை, ஆற்றல் என்பனவற்றின் அடிப்படையிலேயே மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ARC விருதுகளின் அடையாளச் சின்னங்களாகவும் இவையே அமைந்துள்ளன.