Home » பெருமதிப்புமிக்க விருதை வென்றது டயலொக்

பெருமதிப்புமிக்க விருதை வென்றது டயலொக்

by Damith Pushpika
September 24, 2023 6:15 am 0 comment

மொபைல் தொழில்நுட்பத்தை பிரயோகித்து நாட்டை டிஜிட்டல் தளத்தில் மேம்படுத்தும் வகையில் திறம்பட செயற்படுத்தப்பட்ட ‘தேசிய எரிபொருள் அட்டை’ (National Fuel Pass) முன்னெடுப்பிற்காக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இற்கு GSMA M360 APAC 2023 விருதுகளில் ‘Excellence in Digital Inclusion Video Award’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம்முன்னெடுப்பு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் கீழ் MillenniumIT ESP மற்றும் ICTA ஆகிய கூட்டாளர்களுடன் இணைந்து டயலொக்கினால் கட்டியெழுப்பப்பட்டது.

மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த எரிபொருளை வினைத்திறன்மிக்க முறையில் மேலாண்மை செய்து விநியோகிப்பதற்காக 2022 ஆகஸ்ட்டில் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புத்தாக்கமான அமைப்பு நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு மிகவும் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், தகவலறிந்த கொள்கை முடிவுகளை எளிதாக்கும் தரவு மற்றும் சந்தை பகுப்பாய்வுக்கான மதிப்புமிக்க தளமாகவும் செயற்பட்டது. தேசிய எரிபொருள் அட்டை குறித்த டயலொக்கின் சமர்ப்பிப்பு, ஒரு தேசத்தின் டிஜிட்டல் மாற்றத்தின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் சேர்க்கைக்கான மொபைல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பிற்காக ‘Excellence in Digital Inclusion Video விருதை’ வென்றது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ” GSMA M360 APAC 2023 இல் ‘Excellence in Digital Inclusion Video விருதை’ பெறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். தேசிய முன்னேற்றத்திற்காக மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு தேசிய எரிபொருள் அட்டையால் (National Fuel Pass) எடுத்துக்காட்டப்படுகிறது.” என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division