முன்னணி பெண்கள் மாதவிடாய் தூய்மை பராமரிப்பு வர்த்தக நாமமான ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் வழங்கும் Fems, பெண்களுக்கு எப்போதும் தாம் தெரிவு செய்யும் துறைகளில் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு ஊக்கமளிப்புகளை வழங்கியுள்ளது. தமக்கும் சமூகத்துக்கும் சிறந்த எதிர்காலங்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு பெண்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பை கவனத்தில் கொண்டு, ‘H.E.R மையம்” (Help. Empower. Rise) என்பதை அறிமுகம் செய்வதனூடாக பெண்களுக்கான முன்னேற்றத்தை துரிதப்படுத்த முன்வந்துள்ளது.
ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் மாதவிடாய் தூய்மையில் அக்கறை கொள்ளும் முன்னணி வர்த்தக நாமமான Fems, பெண்களின் வளர்ச்சிக்கு வலுவூட்டி, சமூக தடங்கல்களுக்கு அப்பால் கனவு காண்பதற்கு ஆதரவளித்து வருகின்றது.
பெண்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் எமது அர்ப்பணிப்பின் இயற்கையான நீடிப்பாக H.E.R. மையம் அமைந்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமூகங்களுக்கு கற்பித்தல் மற்றும் பல்வேறு தடைகளை கடந்து முன்னேறல் தொடர்பில் தீர்வுகளையும் வளங்களையும் வழங்குகின்றது.” என்றார். H.E.R. மையம் என்பது இலங்கையின் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாக அமைந்திருப்பதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக தூய்மை செயன்முறைகள் தொடர்பில் அறிவூட்டி, மாதவிடாய் தூய்மை துவாய்களை அணுகச் செய்வதை மேம்படுத்தி அவர்களின் தடங்கலில்லாத பயணத்துக்கு வலுவூட்டுகின்றது. Help, Empower மற்றும் Rise எனும் மூன்று அம்சங்களின் பிரகாரம் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன.
வாழ்க்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த பெண்களுக்கு உள்ளடக்கமான சமூகத்தை ஏற்படுத்தவும், வலுவூட்டவும் முன்வந்துள்ளது.