2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வருடம் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு 2,63,993 மாணவர்கள் தோற்றியதாகவும் அவர்களில் 1,66,936 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இது 63.3 சதவீதமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.