கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சவாரியாளர்கள் வாகனங்களில் ஏறுவதற்கான பிரத்தியேகமான இடத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக Uber இன்று அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் இப்போது இந்த விசேடமாக நியமிக்கப்பட்ட இடப் பகுதியில் தமது Uber சவாரியை எளிதாகக் கண்டுபிடித்து, பயணம் தொடர்பான மன அழுத்தம் மற்றும் யூகங்களை இனிமேலும் முகங்கொடுக்க தேவையற்ற ஒரு விடயமாக மாற்றிக்கொள்ள முடியும்.
இது இலங்கையில் தொழில்துறையில் இந்த வகையில் முதன்முதலாக அறிமுகமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை முனையத்தில் அமைந்துள்ள Uber வாகனங்களில் ஏறிக்கொள்ளும் இடத்தில், Uber இன் பயணிகள் வரவேற்பு பற்றிய உரிய தகவல் விபரங்களுக்கு பயணிகள் இப்போது சேவை மையங்களை அணுகலாம். நியமிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் பண வடிவமில்லா பரிவர்த்தனைகள் மூலம் ஓட்டுநர்கள் பயனடைவார்கள்.
ஓட்டுநர் கூட்டாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் Uber வாகனங்களில் ஏறிக்கொள்வதற்கான பயணிகளுக்கான தெளிவான வழி கண்டறியும் அடையாளங்களுடன், இந்த விமான நிலைய கூட்டாண்மை விமான நிலைய பயணத்திற்கான தரத்தை மேம்படுத்தும் மற்றும் சவாரியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும்.