சிறந்த நிதிச் செயல்திறனுடன் சிறந்த நிர்வாகத்தை நிலைநிறுத்தியதற்காக இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் 2022 விருதுகளில் NDB வங்கி இவ்வருடமும் கவுரவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக NDB வங்கிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம்(CIMA)இலங்கை, ஒழுங்கு செய்து இருந்தது. அமெரிக்க சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள் நிறுவனம் (AICPA), இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் Daily FT ஆகியவை வணிக செயல்திறன் மற்றும் தனித்துவமான செயல்திறன் அளவுகோல்களின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கிய மற்றும் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன.மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் இந்த தரவரிசை, சக நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் ஒரு உத்வேகமாக அமைகின்றது.இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நிதி செயல்திறன் மற்றும் நீடித்த வளர்ச்சியை அடைவதன் மூலம் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளன, மேலும் பாராட்டத்தக்க வணிக செயல்திறனை வழங்குகின்றன.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த NDB பிரதம நிறைவேற்று அதிகாரி திமந்த செனவிரத்ன, “எங்கள் பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்குவதில் நிலையான மற்றும் வலுவான நிதிச் செயல்திறனை உறுதிசெய்யும் அதே வேளையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையை NDB உறுதியாக நிலைநிறுத்துகிறது. தரமான மற்றும் அளவு செயல்பாட்டு அம்சங்களுக்கு இடையே ஒரு இணக்கமான சமநிலை அவசியம்.”