இலங்கையின் சர்வதேச வர்த்தக சபையால் (ICCSL) அமெரிக்காவின் சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர் நிலையம் (AICPA) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் (CIMA) என்பனவற்றின் ஒத்துழைப்புடன் நாட்டின்் ‘மிகவும் கவர்ச்சிமிக்க பத்து கம்பனிகளில்’ ஒன்றாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தனிச்சிறப்பு மிக்க தனியார் வங்கி இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். தகுதி தரம் என்பனவற்றுக்கான செயற்பாட்டு குறிகாட்டிகளின் அடிப்படையில் தீவிரமான மதிப்பீட்டின் பின் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்தக் குறிப்பிடத்தக்க கெளரவம் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க “ஒரு கூட்டாண்மை நிறுவனத்துக்கு கவர்ச்சியைத் திரட்டும் முக்கிய காரணிகளில் ஒன்றாக நிலைத்தன்மை செயற்பாடுகள் இருக்கும் அதேவேளை சிறந்த கூட்டாண்மை பிரஜை, சுற்றாடல் மற்றும் சமூக ஆளுகை, தார்மிக இணக்கப்பாடுகள், வாடிக்கையாளர் பதில்கூறல் இயல்புகள் என்பனவும் சம அளவில் முக்கியத்துவம் பெறுவதாகவே நாம் நம்புகின்றோம். கொமர்ஷல் வங்கியின் முக்கிய அவதானப் புள்ளிகளாக இவை காணப்படுகின்றன.
இதனால் தான் நாம் மிகவும் கவர்ச்சிகரமான கம்பனிகளின் பட்டியலில் மீண்டும் அங்கீகாரம் மிக்க இடத்தைப் பெற்றுள்ளோம். இது எம்மை மேலும் உற்சாகப்படுத்துகின்றது” என்று கூறினார்.