இலங்கையில் உயர் கல்விச் சேவைகளை வழங்கும் முன்னணி கல்வியகமான Saegis Campus, தனது பத்து வருட பூர்த்தியை இவ்வாண்டு கொண்டாடும் நிலையில், க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 75% வரை புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
ஆகக்குறைந்தது 3 பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இந்த கற்கைகளை தொடர்வதற்கு இணைய முடியும். அவர்கள் பெற்றுக் கொண்ட சித்திகளின் அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்கப்படும். மூன்று பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றவர்களுக்கு 75% புலமைப்பரிசிலும், ‘B’ சித்தி பெற்றவர்களுக்கு 45%, ‘C’ மற்றும் ‘S’ சித்தி பெற்றவர்களுக்கு முறையே 30% மற்றும் 15% புலமைப்பரிசில் வழங்கப்படும்.
கற்கைநெறியின் முதல் வருடத்துக்கு இந்தப் புலமைப்பரிசில் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பதுடன், மாணவரின் கல்விசார் தேர்ச்சியின் அடிப்படையில் அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் நீடிக்கப்படும்.
தெரிவு செய்யக்கூடிய கற்கைளில் Bachelor of Business Management (Hons) சுற்றுலாத்துறையில் அல்லது விருந்தோம்பல் துறையில் விசேடத்துவம் பெறுவது, சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் அல்லது கணக்கீடு மற்றும் நிதியியல், Bachelor of Business Administration (BBA), முதல் Bachelor of Science Honours (BSc (Hons)) உடன் கணனி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் மற்றும் IT ஆகியவற்றில் விசேடத்துவம், மற்றும் Bachelor of Information Technology (BIT) போன்றன அடங்கியுள்ளன.