மகா சித்தர் சற்குரு சீரடிசாயியின் மகா சமாதி | தினகரன் வாரமஞ்சரி

மகா சித்தர் சற்குரு சீரடிசாயியின் மகா சமாதி

இன்று இவ்வுலகில், ஒரு மகா சக்தியாக, சீரடி சாயி பாபா, சமாதிநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு, உலகில் பல சீரடி ஆலயங்களின் வளர்ச்சி, கட்டுக்கடங்காத பக்தர்களின் எண்ணிக்கை. இன்றைய காலகட்டத்தில் பக்தர்களின் சுமைகளை ஏற்று, மனதிருப்தியை அளிப்பதும், கைகூடாத, நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை நிவர்த்தி செய்வதும், அத்துடன் பக்தர்களின் கனவில் வந்து அறிகுறிகளை வெளிப்படுத்துவதும், பக்தர்களின் தியானத்தில் காட்சியளிப்பதும். வேறு ஒருவரின் தோற்றத்தில் வந்து உதவிபுரிவதும். ​திடீர் என்று தனது தோற்றத்தை ஏதோ ஒரு வழியில் தெரிவிப்பதுமாக இருக்கிறது. 

“சர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்பது வேதாந்தத்தின் மையக்கோட்பாடு. அதுவே எங்கும் நிறை தன்மை எனலாம். சீரடி சாயிபாபா இந்த கொள்கைப்படி வாழ்ந்தார். அவர் எல்லா உயிர்களிடத்திலும் தன்னைக் கண்டார். ஜாதி, மதம், இனம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. இதை அவரிடத்தில் எடுத்துச்செல்ல முடியாது. அவரே தனது ஜாதியையும், மதத்தையும் வெளிப்படுத்தியதும் கிடையாது. 

அக்டோபர் 5ம் திகதி, புதன்கிழமை, சீரடி சாயி நாதரின் மகா சமாதி தினம். அன்றைய புண்ணிய திதியில், விஜயதசமி நாளில் கொழும்பு புதுச்செட்டித் தெருவிலுள்ள, சீரடி சாயி மத்திய நிலையம் (ஸ்ரீலங்கா) ஏற்பாட்டில், வருடாவருடம் இடம்பெறும். “மகா விஷ்ணு யாகம்” காலை 7மணிக்கு நடைபெறவுள்ளது. சீரடி சாயி பாபா மகா விஷ்ணுவின் அவதாரம். ஸ்ரீ தத்தாத்ரேயரின் வழி வந்த சத்குரு, வெங்குசாவை (வெங்கடாஜலபதியை) குருவாகக் கொண்டவர் என்பதால், இந்த யாகம் இடம்பெறுகிறது.  

அத்துடன் அதிகாலை 5மணிக்கு புண்ணிய நீராடலுடன், நான்கு கால ஆராத்தியும். பக்தர்களினால் பால் அபிஷேகமும், சீரடி சாயி பஜன் பூஜைகளுடன் மதிய அன்னதானம் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. அன்று மாலை சித்திரத்தேர் பவனியும் இடம்பெறும். பாபாவைப் பல்லக்கில் சுமப்பதுதான் மரபு. இது ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மாலையில் இடம்பெறுவதுண்டு. ஆனால் சித்திரத்தேரில், வருடத்தில் ஒரு தடவை கோவிலைச் சுற்றி உலா வருவது சாயி நிலையத்தின் சிறப்பு. உலகில் எங்கும் இடம்பெறாத ஒரு பவனி இது.  

எஸ்.என்.உதயநாயகம்,
சீரடி சாயி பாபா மத்திய நிலையம் 

Comments