உலக சைவப் பேரவையின் கொடிதினம் | தினகரன் வாரமஞ்சரி

உலக சைவப் பேரவையின் கொடிதினம்

உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளை வழமைபோல இவ்வருடமும் சிவராத்திரி  தினமான நாளை மறுதினம் (மார்ச் முதலாம் திகதி) சைவக் கொடிதினம் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

மேல் மாகாணம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதி உட்பட இலங்கையின் சகல மாவட்டங்களிலுமுள்ள பெரும்பாலான சைவ ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், அறநெறிப் பாடசாலைகள் என்பனவற்றில் கொடிதின வைபவம் இடம்பெறவுள்ளது.     ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி விற்பனைமூலம் கிடைக்கும் நிதியானது, அந்தந்த மாவட்டங்களிலுள்ள அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.

தற்போது நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கொடிதின நிகழ்ச்சிகள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படவிருப்பதாக, உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளை தலைவர் கா.தயாபரன் தெரிவித்துள்ளார்.

Comments