19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்; இங்கிலாந்து செல்லும் அணியில் யாழ். இளைஞன் | தினகரன் வாரமஞ்சரி

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்; இங்கிலாந்து செல்லும் அணியில் யாழ். இளைஞன்

இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19வயதுக்குட் பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  

கொழும்பு, கல்கிசை சென்ட் தோமஸ் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன், அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19வயதிற்குட்பட் டோருக்கான சுற்றுப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் தற்போது இங்கிலாந்து செல்லும் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனிஸ்ரன் குணரட்ணம், யாழ். கல்லூரியின் பழைய மாணவர்களான டாக்டர் ஹன்றி றோச் குணரட்ணம் மற்றும் டாக்டர் சினோதயா குணரட்ணம் ஆகியோரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, யாழ். கல்லூரியுடன் தொடர்புகளை கொண்டிருந்த ரஸல் ஆர்ணல்ட் 1997, - 2007ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை அணியின் சகலதுறை வீரராக பெருமை சேர்ந்திருந்தார்.

தற்போது கனிஸ்ரன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

Comments