2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்: இதுவரை 29 நாடுகள் தகுதி! | தினகரன் வாரமஞ்சரி

2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்: இதுவரை 29 நாடுகள் தகுதி!

இவ்வருடம் நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் 18ம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ள 22வது உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிக்கு இதுவரை 29 நாடுகள் தெரிவாகியுள்ளன. இத்தொடரில் பங்குகொள்ளும் மற்றைய மூன்று நாடுகளுக்கான தெரிவுப் போட்டிகள் எட்டு நாடுகளுக்கிடையில் எதிர்வரும் ஜுலை மாதத்தில் நடைபெறவுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு உலகக் கிண்ணம் முடிவடைந்தவுடன் 2022ம் ஆண்டுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான தெரிவு போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தன. கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தொடர்கள் சற்று தள்ளிப்போனது. கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் 6 வலயங்களில் நடைபெற்ற தெரிவுச் சுற்றுக்களில் இந்த 29 நாடுகளும் வெற்றி பெற்றுத் தெரிவாகியுள்ளன. அவ்வடிப்படையில் ஐரோப்பிய வலயத்திலிருந்து 13 நாடுகளும், ஆசிய மற்றும் தென் அமெரிக்க வலயத்திலிருந்து 10 நாடுகளும், ஆபிரிக்க வலயத்திலிருந்து 5 நாடுகளும், வட, மத்திய அமெரிக்கா மற்றும் கெரிபியன் வலயத்திலிருந்து 4 நாடுகளும் இம்முறை கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பங்குகொள்ளவுள்ளன.

இம்முறை கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கட்டார் அணி 2010ம் ஆண்டே தொடரை நடாத்தும் அணி என்றவகையில் தெரிவுசெய்யப்பட்டது.

2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஜே. பிரிவின் சம்பியனாத் தெரிவு செய்யபட்டதால் ஜேர்மனி அணி தெரிவு செய்யப்பட்டது. இதுவரை இவ்வணி 19 உலகக் கிண்ணத் தொடர்களில் பங்குபற்றியுள்ளதுடன் 1954, 1974, 1990, 2014ம் ஆண்டுகளில் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் எப். பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் டென்டார்க் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவு செய்யப்பட்டது. 5 உலகக் கிண்ணத் தொடர்களில் பங்குகொண்ட அவ்வணி 1998ம் ஆண்டு காலிறுதிக்குத் தெரிவானமை உலகக் கிண்ணத் தொடரில் உச்ச சாதனையாகும்.

பிரேசில் அணி 2021ம் ஆண்டு தென் அமெரிக்க வலய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 21 உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேசில் அணி 1958, 1962, 1970, 1994, 2002ம் ஆண்டுகளில் கிண்ணத்தைக் கைப்பற்றியது,

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் டீ பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ளது. இதுவரை 15 முறை தெரிவாகியுள்ளதுடன் 1998, 2018ம் ஆண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஈ பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் பெல்ஜியம் இம்முறை தெரிவாகியுள்ளது. 13 முறை உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றியுள்ள அவ்வணி 2018ம் ஆண்டு மூன்றாடமித்தைப் பெற்றதே அவ்வணியில் உச்சபட்ச உலகக்கிண்ண சாதனையாகும்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஈ பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் குரோஷிய அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 5 முறை உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியுள்ள அவ்வணி 2018ம் ஆண்டு 2ம் இடத்தைப் பெற்றதே அவ்வணியின் உச்சபட்ச உலகக்கிண்ண சாதனையாகும்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் பி பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் ஸ்பையின் அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 15 முறை உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள அவ்வணி 2010ம் ஆண்டு கிண்ணம் வென்றது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஏ பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் செர்பிய அணி இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியுள்ள அவ்வணி 1930, 1962 ஆண்டுகளில் 4வது இடத்தைப் பெற்றதே அவ்வணியின் உலகக்கிண்ணத் தொடரில் உச்சபட்ச சாதனையாகும்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஐ பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடத் தகுதி பெற்றது. இதுவரை 15 முறை உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியுள்ள அவ்வணி 1966ம் ஆண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் சி பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் விளையாடத் தகுதிபெற்றுள்ள சுவிட்சர்லாந்து இதுவரை 15முறை உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றியுள்ளதுடன், 1934, 1938, 1954ம் ஆண்டுகளில் காலிறுதிக்குத் தெரிவானதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பா கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட சுற்றுத் தொடரில் ஜி பிரிவில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதால் நெதர்லாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தை உறுதி செய்துகொண்டுள்ளது. இதுவரை 10 முறை உலகக்கிண்ணத் தொடருக்குத் தெரிவாகியுள்ள அவ்வணி 1974, 1978, 2012ம் அண்டுகளில் இரண்டாம் இடம்பெற்றதே உலகக்கிணத்தில் உச்சபட்ச சாதனையாகும்.

ஆர்ஜென்டீனா அணி 2021ம் ஆண்டு தென் அமெரிக்க வலய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றதால் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 17 உலகக் கிண்ணச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள அவ்வணி 1978, 1986ம் ஆண்டுகளில் சம்பியனாக மகுடம் சூடியது.

இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 3வது சுற்றின் ஏ பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ஈரான் அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. 5 முறை உலகக்கிணத்துக்குத் தெரிவான அவ்வணி முதல் சுற்றுடனே வெளியேறியது.

இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 3வது சுற்றின் ஏ பிரிவில் 2வது இடத்தைப் பெற்றதன் மூலம் தென்கொரியா அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. 10 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியுள்ள தென்கொரியா 2002ம் ஆண்டு 4வது இடத்தைப் பெற்றதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும். இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 3வது சுற்றின் பி பிரிவில் இரண்டாவது இடததைப் பெற்றதன் மூலம் ஜப்பான் அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவானது. 6 முறை உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியுள்ள அவ்வணி 2002,2010, 2018ம் ஆண்டுகளில் இரண்டாவது சுற்றுத் தெரிவானதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 3வது சுற்றின் பி பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சவூதி அரேபிய அணி இம்முறை உலக்கக்கிண்ணச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டது. 5 முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அவ்வணி 1994ம் ஆண்டு இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

இக்குவடோர் அணி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தென் அமெரிக்க வலய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 4ம் இடத்தைப் பெற்றதால் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 3 முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ள அவ்வணி 2006ம் ஆண்டு இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

உருகுவே அணி கடந்த மார்ச் மாதம் தென் அமெரிக்க வலய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 3ம் இடத்தைப் பெற்றதால் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 13 முறை உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவான அவ்வணி 1930 மற்றும் 1950ம் ஆண்டுகளில் கிண்ணம் வென்ற அணியாகும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய அமெரிக்க மற்றும் கெரிபியன் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 3வது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் கனடா அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. 1986ம் ஆண்டு மட்டுமே உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான அவ்வணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

கடந்த மார்ச் மாதம் ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் மூன்றாவது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் கானா அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை மூன்று உலகக்கிண்ணத் தொடரில் பங்குபற்றியுள்ள அவ்வணி 2010ம் ஆண்டு காலிறுதிக்குத் தெரிவானதே உச்சபட்ச சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் மூன்றாவது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் செனகல் அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 2 முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான அவ்வணி 2002ம் ஆண்டு காலிறுதிக்குத் தெரிவானதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய தொடரில் 2வது சுற்றின் சம்பியனாகத் தெரிவானதன் மூலம் இம்முறை போர்த்துக்கல் உலகக்கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 7 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ள அவ்வணி 1966ம் ஆண்டு மூன்றாவது இடத்துக்கு வந்ததே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் மூன்றாவது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் டுனீசியா அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 5 முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவான அவ்வணி முதல் சுற்றுடனேயே வெளியேறியது.

கடந்த மார்ச் மாதம் ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் மூன்றாவது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் மொரோக்கோ அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 5 முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அவ்வணி 1986ம் ஆண்டு இரணடாவது சுற்றுக்குத் தெரிவானது உச்சபட்ச சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் மூன்றாவது சுற்றில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் கெமரூன் அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 7 முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவான அவ்வணி 1990ம் ஆண்டு காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் வட, மத்திய அமெரிக்க மற்றும் கெரீபியன் வலய மூன்றாவது சுற்றின் மூன்றாவது இடம் பெற்றதன் மூலம் அமெரிக்க அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 10 முறை உலகக் கிண்ணப்போட்டிக்குத் தெரிவான அவ்வணி 1930ம் ஆண்டு மூன்றாவது இடம்பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வட, மத்திய அமெரிக்க மற்றும் கெரீபியன் வலய மூன்றாவது சுற்றின் மூன்றாவது இடம் பெற்றதன் மூலம் மெக்ஸிக்கோ அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 16 முறை உலகக் கிண்ணத்தொடருக்கு தெரிவாகியுள்ளதுடன் 1970, 1986ம் ஆண்டுகளில் காலிறுதிக்குத் தெரிவானதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2வது சுற்றின் சம்பியனானதன் மூலம் இம்முறை போலந்து அணி உலகக் கிண்ணத் தொடருக்குத் தெரிவானது. இதுவரை 8 முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான அவ்வணி 1974, 1982ம் ஆண்டுகளில் முன்றாமிடம் பெற்றதே அதன் உலகக் கிண்ணப் போட்டிகளில் உச்சபட்ச சாதனையாகும்.

Comments