மானிப்பாய் மருதடி விநாயகராலய தேர்த்திருவிழா | தினகரன் வாரமஞ்சரி

மானிப்பாய் மருதடி விநாயகராலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணத்தை தமிழரசர் ஆண்ட காலத்தில் சைவசமயத்தின் மகத்துவங்களை நிலைநாட்டினார். இக்காலத்தில் ஒரு தபசிரேஷ்டரானவர் தமிழரசர் பிற்காலத்திலும் பறங்கியர் யாழ்ப்பாணத்தை தம்வயப்படுத்திய சொற்ப காலங்களுக்கு முன்னருமாய் மானிப்பாய் மருதடி விநாயகராலயத்தில் நிஷ்டையில் இருந்து சமாதியாய் விட்டார். மேற்படி மகான் சமாதி அடைந்த காலத்தில் பறங்கியர் மருதடி விநாயகர் ஆலயத்தை இடித்துச் சவக்காலையாக்கி விட்டனர்.

இந்நாட்களில் மக்கள் மகான் சமாதியடைந்த இடமும் இப்பொழுது மூலஸ்தானத்திற்கு கிழக்கில் இருப்பதுமாகிய மருதமரத்தின் கீழ் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டு கற்பூரமெரித்து இவ்வாறாக பல இக்கட்டான நிலைகளைக் கடந்து வரும் காலகட்டத்தில் நாற்பது வருடங்களின் பின்னர் பறங்கியர் அரசு ஒல்லாந்தர் கைக்கு மாறியது. இராக்காலங்களிலும் பறங்கியர் விநாயகரை வழிபட்டு வந்தார்கள். ஒல்லாந்தர் அரசு காலத்தில் பொங்கல் வணக்கங்கள் மருதடியில் விசேடமாகவும் வெளிபொருளாயும் நடந்து வந்தன. இக்காலத்தில் தொண்டை மண்டலத்தில் இருந்து வந்த தியாகராசுக்குருக்கள் நவாலி தூக்கிணி கோவிலடியில் தங்கினார். தூக்கிணி வைரவ கோவிலில் இருந்து ஒரு வருடமாக சிவபூசை வணக்கம் செய்து வரும் நாட்களில் அங்கு வேள்வி நடைபெற ஆயத்தமாகியது. பெரியவர் இக்கோவிலில் பெருந்தொகையான ஆடுகள் வெட்டப்படுமென்று கேள்விப்பட்டார். உடனே அவ்விடத்தை விட்டு மானி நகரிலுள்ள மருதஞ்சோலையை அடைந்தார்.

அங்கு எமது கொப்பாட்டன் சுவாமிநாத முதலியாரின் உதவியை நாடி நிலம் பெற்று சிறு வீடு கட்டியிருந்தார். அந்த நாட்களில் இவ்விடத்தில் அனேக சனங்கள் பொங்கல் வணக்கஞ் செய்து வந்தமை கண்டு ஓர் விநாயகர் சிலை வைத்துப் பூசாக்கிரமங்கள் செய்து வந்தார். பின்னர் சுவாமிநாத முதலியாரின் உதவியுடன் மருதமரத்தின் மேற்குத் திசையை நோக்கிக் கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் கட்டி முடித்து எஞ்சிய பாகங்களை மரந்தடிகளால் உருவாக்கிய பங்குனி மாசத்தில் மகோற்சவம் ஆரம்பஞ் செய்து சித்திரை முதலாம் திகதியில் ஆருஷம் ஆரம்பமாகும் போது  இரதோற்சவமும் அடுத்த நாள் தீர்த்தோற்சவமும் நடத்தி வந்தார். ஆலயம் உற்பத்தியான காலங்களில் ஒல்லாந்த அரசு முடிந்து ஆங்கிலேயர் காலம் உதயமானது.

ஆங்கிலேயர் காலத்தில் மருதடியாலயம் அதி உன்னத மகத்துவ மேம்பாட்டு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. கோயில் திருப்பணி வேலைகள் பல பெரியோர்களால் செய்யப்பட்டது. இத்திருப்பணி வேலைகளை பெரியவர்கள் ஒவ்வோர் காரணம் பற்றிச் செய்வித்தார்கள். உதாரணமாக இரகுநாத முதலியார் சின்னத்தம்பி  ஒருமுறை கொடிய விஷம் தீண்டப்பெற்று அவ்விஷம் இறங்கினால் விநாயகருக்கு இரதஞ் செய்து வைப்பதாகப் பிரார்த்தனை செய்ததாகவும் அதனால் அக்கொடிய விஷம் நீங்கி அவர் சுகம் பெற்றதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. சைவசமயத்தை நிலை நிற்கசெய்து ஆலயங்களில் ஒன்று. இம் மருதடி ஆலயமே தற்பொழுது தர்மகத்தா சபையினர் ஆலயத்தை நிகர்வாகம் செய்கின்றனர்.

புது வருடம் ஆரம்பமாகும் நேரத்தில் விநாயகப்பெருமான் அதி உன்னத விசித்திர அலங்காரம் அமைக்கப் பெற்ற இரதத்தில் ஏறி வீதிவலம் வருகின்ற அற்புதக் காட்சியை எல்லோரும் கண்டு இன்புறுகின்றனர்.

வருஷம் பிறந்த இரண்டாம் நாள் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருதடியில் 22.03.2022. கொடியேற்றம் ஆரம்பமாகி வருஷப்பிறப்பன்று இரதோற்சவம் நடைபெறுகிறது.

சுவாமிநாதன் தர்மசீலன் JP

Comments