Home » இலங்கை சரித்திரத்தில் முதன்முறையாக

இலங்கை சரித்திரத்தில் முதன்முறையாக

-அரசாங்க ஊடக நிறுவனம் நடத்தும் தமிழ் மொழியிலான ஊடக தொடர்பாடல் டிப்ளோமா

by sachintha
August 18, 2024 5:01 pm 0 comment

லேக் ஹவுஸ் மீடியா அகாடமி (LHMA) தமிழில் ஊடக தொடர்பாடல் பற்றிய விரிவான டிப்ளோமா பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. இது LHMA இன் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் முதல்கட்டம் 2024 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை சலுகைக் காலமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவன தலைவரின் வழிகாட்டலில் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபை உறுப்பினரான மூத்த ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜினால் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் பாட நெறிக்கு பதிவு செய்யும் பணிகளை சங்கீத்பனி விஜயவர்தன மேற்கொள்கிறார்.

 

இந்த பாடத்திட்டத்தின் வடிவமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் உடனான நேர்காணல் இது.

கே : இந்த பாடநெறியின் முக்கியத்துவம் பற்றி கூற முடியுமா ?

பதில் : இது சமகாலத்தில் ஒரு சிறந்த ஊடக டிப்ளோமா கற்கைநெறியாகும். வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி, அச்சு – பத்திரிகை அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. செயல்முறை practical விளக்கங்களும் உண்டு.

கற்கைநெறிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும். சனி,ஞாயிறு தினங்களில் வகுப்பறை பயிற்சிகள், கொழும்பில் லேக் ஹவுஸ் நிறுவன பயிற்சி கூடத்தில் இடம்பெறும். அவசியம் ஏற்பட்டால் சில சந்தர்ப்பங்களில் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாகவும் பயிற்சிகள் நடத்தப்படும். அரச ஊடகமொன்று தமிழ் மொழியில் டிப்ளோமா பயிற்சி நெறியை முன்னெடுப்பது இதுவே முதற் தடவையாகும். இது 100வீதம் அரச அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா சான்றிதழாகும். பதிவுக்கட்டணம் செலுத்தியவுடன் நேர அட்டவணை தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். பெரும்பாலும் ஞாயிறு மு.ப 9- – பி.ப 3.30 மணிவரை பாடங்கள் நடத்தப்படும்

கே: பாடநெறிக்கான காலவரையறை பற்றி கூற முடியுமா ?

பதில் : பாடநெறி காலம் சுமார் 8 மாதங்கள். உண்மையில் இந்த பாடநெறி ஆரம்பத்தில் 1 வருடத்திற்கு வடிவமைக்கப்பட்டது, ஆனால் சமூகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கால அளவு 8 மாதங்களாக குறைக்கப்பட்டது.

கேள்வி : பாட நெறி கட்டணம் பற்றி?

பதில் : பாடநெறிக் கட்டணம் ரூ. 60,000/-– மட்டுமே (அனைத்தும் உள்ளடங்கலாக). இதனை ரூபா 11000/-–வீதம் மாதாந்த தவணைகளாகச் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாடநெறிக் கட்டணமானது விரிவுரை மண்டபத்துக்கான அடிப்படைச் செலவு, விரிவுரையாளர் கொடுப்பனவு, மின்சாரம் மற்றும் இதர மேல்நிலைச் செலவுகளை சமாளிக்கவே அறவிடப்படுகிறது. இந்த கட்டணம் உண்மையில் பெயரளவிலான சலுகைக் கட்டணமாகவே கருதப்படுகிறது. ஆனால் இரண்டாவது தொகுதி மாணவர் உள்ளீர்ப்புக்கு, தேவைப்பாடு காரணமாக பாடநெறிக் கட்டணம் அதிகரிக்கப்படும்.

கே : பாட நெறி சமகால ஊடக அறிவுத் தேவையை பூர்த்தி செய்யுமா ?

பதில் : நிச்சயமாக பூர்த்தி செய்யும். ஊடகத் தொடர்பாடலின் தற்போதைய போக்குக்கு ஏற்றவாறு பாடநெறி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் பாடநெறி வடிவமைப்பின் முக்கிய ஆசிரியராக இருந்தாலும், நுண்ணறிவு வடிவமைப்பு கட்டமைப்புகள், இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பாக மதிப்பாய்வு மற்றும் பாடநெறி பகுப்பாய்வு பல கட்டங்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கே : இந்த பாட நெறியின் உள்ளடக்கம் பற்றிய ஒரு சிறு விளக்கம் தர முடியுமா ?

பதில் : ஊடகத் தொடர்பாடல் டிப்ளோமாவில் ஊடக நெறிமுறைகள், ஊடக பண்புகள், இலத்திரனியல் ஊடகங்களின் (வானொலி-/தொலைக்காட்சி) நடைமுறைகள், அச்சு ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர ஊடகங்களின் விரிவான ஆய்வுத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நடைமுறை விளக்க பயிற்சியானது ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். லேக் ஹவுஸ் (அச்சு ஊடகம்), வானொலி ஒலிபரப்பு (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் SLBC மற்றும் தொலைக்காட்சி (ரூபவாஹினி கூட்டுத்தாபனம் SLRC) ஆகியவற்றின் வேலைக் கட்டமைப்பை மாணவர்கள் அவதானிக்கும் வாய்ப்பைப் பெறுவர். மாணவர்களுக்கு நிகழ்நேர நடைமுறை விளக்கங்கள் மற்றும் டெமோக்கள் – செயல்முறை விளக்கவுரைகளும் வழங்கப்படும்.

கே : பாட நெறியின் விரிவுரையாளர்கள் பற்றி கூற முடியுமா ?

பதில் : உயர் தகுதியும் அனுபவமும் கொண்ட விரிவுரையாளர் குழு மாணவர்களுக்கு ஊடக நிபுணத்துவப் பயிற்சியை வழங்குகிறது.

நான் பாட ஒருங்கிணைப்பாளராகவும் விரிவுரையாளராகவும் செயல்படுவேன். ஊடக தொழிலில் தற்போது பணிபுரிபவர்கள் (Working Journalists) விரிவுரைகளை நடத்துவார்கள் என்பது சிறப்பம்சமாகும்.

கே : இந்த பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எவ்வாறு இருக்கும் ?

பதில் : உயர் அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா கற்கைநெறியை தொடர்ந்து, நன்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பெற, ஊடக ஆர்வமுள்ள தமிழ் பேசும் சமூகத்திற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த கற்கை நெறியில் சிறந்து விளங்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தகுதி நிச்சயம். வேலைவாய்ப்பை பெற்று தரும். பாடத்திட்டத்தில் பல வகுப்பு அறை ஒப்படைகள் (CA), களப் பணிகள் (FA) மற்றும் குழுநிலை ஒப்படைகள் (GA) உள்ளன.

கே: புள்ளி வழங்கப்படும் முறை மற்றும் மதிப்பீட்டு பணிகள் பற்றி கூற முடியுமா ?

பதில் : பாட மதிப்பீட்டு செயல்முறை கடினமான மற்றும் சவாலான செயல்முறையாகும், எனவே மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வருகைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கே : பாட நெறி எப்போது ஆரம்பமாகும் என்று சொல்ல முடியுமா ?

பதில் : வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் லேக் ஹவுஸ் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வெகு விமரிசையான ஆரம்ப விழாவுடன் வகுப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கே: வகுப்புகள் இடம்பெறும் நாள் மற்றும் நேரம் பற்றி கூறமுடியுமா ?

பதில் : வழக்கமாக வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, கொழும்பில் அமைந்துள்ள லேக் ஹவுஸ் மீடியா அகாடமி கேட்போர் கூடத்தில் நடத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக வகுப்புகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது கூடுதல் ZOOM அமர்வுகள் நடத்தப்படும்.

வழக்கமாக 45 மணிநேர வகுப்பறைப் பயிற்சி மற்றும் 105 மணிநேர வகுப்பறை பணிகள் (CA), Field Assignments (FA) மற்றும் குழு பணிகள் (GA) இருக்கும். எதிர்காலத்தில், LHMA இந்தச் சேவையை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கு கிளை நிறுவனங்களின் மூலம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கே: இந்த பாடநெறி மற்றும் பதிவு செயல்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?

பதில் : பாடநெறி பற்றி, மேலும் விபரங்களுக்கு நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் ஜெயரஞ்சன் யோகராஜ் 0777 315 ​​206 அல்லது WhatsApp: 0727 315 ​​206 அல்லது 0703165206

கே: பாட நெறி பதிவு கட்டணம் பற்றி கூறமுடியுமா ?

பதில் : பதிவுக் கட்டணம் ரூ 3000/-– மட்டுமே. LHMA யில் மாணவராகச் இணைவதற்கு இது ஒரு முறை கட்டணம். ஒருமுறை செலுத்தினால் வாழ்நாள் முழுதும் மாணவராக இருக்க முடியும்.

பதிவு விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் சந்தீபனி விஜயவர்தன 0770 088 467 (குரல் அழைப்பு மற்றும் வட்ஸ்அப்)

கே : பதிவுகள், விண்ணப்பத்திற்கான கால எல்லை, முடிவுத்திகதி பற்றி?

பதில் : இறுதித் திகதி ஒகஸ்ட் 20, 2024 என்றாலும், பதிவு செய்ய ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை உங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செயல்முறை முழு செயல்முறையின் மிக முக்கியமான பகுதியாகும்.

இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division