யாழ். சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் அபேஸ் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் அபேஸ்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்க வந்த அடியார்களிடம் சுமார் 70பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தங்க நகைகளைப் பறிகொடுத்த 18பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (09) நடைபெற்றது. 

பல்லாயிரக் கணக்கான அடியார்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர். இவர்களிடம் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். தங்க நகைகளைப் பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் படி சுமார் 70 தங்கப் பவுண்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியார்கள் பங்கேற்றனர்.

Comments