சுற்றுலாத்துறை தூதுவராக சனத் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறை தூதுவராக சனத்

இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார். 

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றது. 

சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர், மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments