-நல்ல மாப்பிள்ளைதான்
மிச்சம் நல்ல
மாப்பிள்ளைதான்
அழகென்ன குணமென்ன
அன்பென்ன அறிவென்ன
இறைவன் கொடுத்த வரம்
மிச்சம் நல்ல
மாப்பிள்ளைதான்……
விடியவும் எழும்பமாட்டார்
வேலைக்கும்
போக மாட்டார்
பிடியாய்ப் பிடித்திடுவார்
சாப்பாட்டை ஒரு
பிடியாய்ப்
பிடித்திடுவார்………
ஆடைகளை
துவைச்சி வச்சா
அழகழகா
உடுத்திக்குவார்….
மேடைகளில் ஏறி நின்று
தத்துவமும்
பேசிக்குவார்…….
நகச்சுவையாய் பேசிப் பேசி
நங்கையரை
வளைத்திடுவார்
புகைந்து புகைந்து
நெஞ்சுக்குளே
பொறாமையையும்
வளத்துக்குவார்…….
எச்சி கணக்குப் பார்ப்பார்
எச்ச வாயில
பிச்சையும் எடுப்பார்
பிச்சி தேங்காயிலும்
தைலம் வடிப்பார்
போதுமடா இவரோடு
வாழ்ந்த வாழ்க்கை.!
உல்லாசமாய் சாஞ்சிகிட்டு
ஊர்வம்பு அளந்திடுவார்
சல்லாபமாய்
கதைகள் சொல்லி
சாகசங்கள்
படைத்திடுவார்……
மாப்பிள்ளை
மாடென்று
இவரைத்தான்
சொன்னார்களா..??
காப்பிள்ளை
கணக்கிற்கும்
கையால் ஆகாதடா…..
வேப்பிலை
வாழ்க்கை போலே
வீணான
மாப்பிள்ளை தான்….!
நல்ல மாப்பிள்ளை
214
previous post