NDB வங்கி மற்றும் சிரச News 1st இணைந்து இலங்கைப் பெண்களை கௌரவிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும், வெற்றிகரமாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக இலங்கை வனிதாபிமான விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
2021 இல் நெலும் பொகுன, 2022 இல் BMICH மற்றும் 2023 இல் ஸ்டெயின் கலையரங்கம் போன்ற பிரமாண்டமான அரங்குகளில் நடந்த இறுதிப் போட்டிகளில் இந்த நிகழ்வின் மகத்தான வெற்றி கட்டியெழுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நீண்டு பிரமாண்டமாக நிறைவடைகிறது.நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பின் பல்வேறு துறைகளில் பெண்களின் சிறப்பான சாதனைகளைக் கொண்டாடும் விருது வழங்கும் விழாவாக இது அமைகிறது.
இலங்கைப் பெண்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விருது வழங்கும் திட்டம், இன்று தேசிய அளவிலான ஒரு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், சமூக-பொருளாதார நுழைவுத் தடைகளை உடைப்பதிலும் தீவிரமாக பங்களித்துள்ளது. 2022 வரை, திட்டத்திற்காக கிட்டத்தட்ட 5,000 விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, மேலும் 200 க்கும் மேற்பட்ட மாகாண வெற்றியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பரந்த அளவிலான நிதி மற்றும் நிதிசார் அல்லாத ஆதரவு சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.